சிந்திக்கும் திறன் கொண்ட ‘ரோபோ’வை உருவாக்கிய இந்தியர்
கர்நாடக
மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் ராம் ராமமூர்த்தி. இவர்
இங்கிலாந்தில் உள்ள ஈடன்பர்க் பல்கலைக்கழகத்தில் கணிபொறி அறிவியல் துறையில்
பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான ஆராய்ச்சிக் குழு
புத்திசாலியான புதிய ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த ரோபோ செயற்கை சிந்தனை திறன் கொண்டது. இது மனிதர்களுடன்
‘ராக்-சிஸ்சர்-பேப்பர்’ என்ற விளையாட்டை விளையாடும். இரண்டு நபர்கள் கைகளை
நீட்டி, பறை, கத்தரிகோல், காகிதம் என்ற மூன்று வடிவங்களை கைகளால் காண்பிக்க
வேண்டும்.
ஒரே வடிவத்தை இரண்டு பேரும் காண்பித்தால் போட்டி முடிந்து விடும். இந்த
விளையாட்டினை ரோபோ மனிதர்களுடன் தொடர்ந்து விளையாட முடியும். இரண்டு அடி
உயரம் கொண்ட இந்த ரோபோ மனிதனின் சைகைகளை புரிந்து கொள்கிறது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஈடன்பர்க் சர்வதேச அறிவியல் திருவிழாவில் இந்த
ரோபோ அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ரோபோ 2013-ம் ஆண்டு நடைபெற
உள்ள ரோபோ கால்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
சீனா தயாரித்துள்ள மனித ரோபோ
ஹாங்காங்: அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு, போட்டியாக,
சீனப் பல்கலை ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது. ஹாங்காங் பல்கலையில், கடந்த
வாரம், "ஹுயுமானாய்டு ரோபோஅட்லஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ,
அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ, மனிதர்களைப் போன்று நடக்கவும், அனைத்து
பணிகளையும் செய்யும் விதத்தில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட புரோகிராம், இதில்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆறடி உயரமும், 150 கிலோ எடையும் உள்ள, இந்த
அட்லஸ் ரோபோ, அலுமினியம் மற்றும் டைட்டானியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு, 12.24 கோடி ரூபாய். - நன்றி தினமலர்
ஜப்பான் உருவாக்கிய கிரோபோ ரோபோட்.
டோக்கியோ: விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள முதல் மனித உருவம் கொண்ட
கிரோபோ என்ற ரோபோட், தனது முதல் வார்த்தையை விண்வெளியில் பதிவு
செய்துள்ளது.
ஜப்பான் உருவாக்கிய ரோபோட் இது. இந்த ரோபோட் தற்போது தனது முதல் வார்த்தையை
விண்வெளியில் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. இதுதான்
விண்வெளியில் ஒலித்த முதல் ரோபோட் குரலாகும்.
நான் தான் கிராபோ...
ஜப்பான் மொழியில் அது முதலில் பேசத் தொடங்கியபோது, பூமியில் உள்ள
அனைவருக்கும் குட்மார்னிங் . நான்தான் கிரோபோ. நான்தான் உலகின் முதல்
விண்வெளி ரோபோட் வீரர் என்று ஆரம்பித்தது.
வணக்கம் நண்பர்களே....
அகன்ற கண்களுடன் பெரிய சைசிலான கண்களைக் கொண்டது கிரோபோ ரோபோட். சர்வதேச
விண்வெளி நிலையத்திலிருந்தபடி இந்த ரோபோட், பூமியில் வசிக்கும்
மனிதர்களுக்கு வணக்கம் என்று தனது முதல் பேச்சில் தெரிவித்தது.
ஆம்ஸ்டிராங்க்கு அஞ்சலி....
மேலும் நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங்குக்கும் அது அஞ்சலி செலுத்தியது.
பிரகாசமான எதிர்காலம்....
கிரோபோவின் பேச்சு வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும்
அது கூறுகையில், 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி ஒரு ரோபோட், புதிய
பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தனது காலடியை எடுத்து வைத்தது என்று தன்னைப்
பற்றியும் கூறியுள்ளது.
ஒரு கிலோ எடை....
இந்த ரோபோட்டின் உயரம் 34 சென்டிமீட்டராகும். எடை வெறும் ஒரு கிலோதான். இது கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி இது பூமியை விட்டுக் கிளம்பியது.
மார்ஸ் கிரகத்திற்க்கு நாஸாவின் பாம்பு ரோபோட் !!!
இதுவரை நாஸா (NASA) அமைப்பு மார்ஸ் கிரகத்திற்ககு நான்கு ரோபோட்களை
அனுப்பியுள்ளது. 1997ல் சோஜோர்னர் (sojourner) என்ற ரோபோ, 2003ல் ஸ்பிரிட்
(spirit) மற்றும் ஆப்பர்ஷூனிட்டி (opportunity) என இரண்டு ரோபோக்கள், இந்த
வருடம் அனுபப்பட்ட குரியோஸிட்டி ஆகியவையே அந்த ரோபோட்களாகும்.
இந்த ரோபோட்கள் அனைத்தும் சூர்ய சக்தியில் இயங்கக்கூடிய 6 சக்கரங்கள் கொண்ட
ரோபோட்கள் ஆகும். இந்த ரோபோட்களுக்கு மார்ஸ் கிரகத்தில் உள்ள மண்ணின்
மாதரியை எடுக்க மற்றும் கேமராவை ஆப்ரேட் செய்ய ரோபோடிக் கைகளும் உண்டு.
இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் இருக்கும் மண்ணை சோதனை செய்து அதை பற்றிய
தகவலை பூமிக்கு அனுப்பும். ஆனால் இந்த ரோபோட்கள் மார்ஸ் கிரகத்தில் உள்ள
சில முக்கியமான இடங்களுக்கு சென்று மண்ணை எடுத்து பரிசோதிக்க முடியவில்லை.
மேலும் இந்த மண்ணை பூமிக்கும் கொண்டு வர வேண்டும். அதை பூமிக்கு கொண்டு
வந்தால் இங்கு உள்ள விஞ்ஞானிகள் அதை இன்னும் நுட்பமாக பரிசோதிப்பார்கள்.
அதற்க்காகவே பாம்பு ரோப்பாட்டை (snake robot) அடுத்து மார்ஸ்க்கு பரிசீலனை
செய்கின்றனர்.
பொதுவாகவே பாம்பு அனைத்து நிலப்பரப்பிலும் வாழும் உயிரினமாகும். இது தனது
உடல் வாகு காரணமாக எளிதாக நிலப்பரப்புகளில் பயணம் செய்யும் அதனால் தான்
பாம்பு வடிவத்தில் ரோபோவை மார்ஸ் கிரகத்திற்க்கு அனுப்ப எண்ணுகின்றனர்.
பாம்பு வடிவ ரோபோட் மார்ஸ் கிரக்கத்தில் உள்ள மத்த ரோபோட்கள் செல்ல முடியாத
இடத்திற்க்கு சென்று மண்ணை பரிசோதிக்க உதவும் என்பது தான் விஞ்ஞானிகளின்
கருத்து.
மனிதன் செய்யும் அத்தனை செயல்களையுமே தற்போது உள்ள ரோபோட்கள் மிக
எளிதாத செய்து வருகின்றன இந்த காலத்தில் இனி வருங்காலத்தில் ரோபோட்
யுகமாகவே கூட இருக்கலாம் என நமக்கு தோன்றுகிறது.
அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு ரோபோட் ஒன்று வெளிவந்திருக்கிறது இது
மனிதன் செய்வது போலவே பல வேலைகள் செய்து வருகின்றன.
இது கடையில் பணிபுரியும் ஒரு ஊழியரை போல நடந்து கொள்கிறது அவர்களது அனைத்து
வேலைகளையும் இந்த அதிசய ரோபோட் மிக எளிதாக செய்து முடிக்கின்றது.
விவசாயம்செய்யும் ரோபோ
விவசாயம்செய்யும் ரோபோ
"ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு
புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்." -
பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம்
ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ
புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள, ‘உலக
புத்தாக்கப் போட்டி’க்காக விவசாயம்செய்யும் ரோபோவை வடிவமைப்பதில்
மூழ்கியிருக்கும் பாலாஜி ஓர் அசலான கிராமத்து இளைஞர். விழுப்புரம் அருகே
உள்ள கண்டாச்சிபுரம்தான் இவரது சொந்த ஊர்.
"விவசாய
நாடான இந்தியாவுல, 2020ஆம் ஆண்டுக்குள் விவசாயம்செய்யும் ரோபோவை
அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் என்னோட தற்போதைய லட்சியம்" என்னும்
பாலாஜி, ரோபோ காதல் காரணமாக, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.டெக்.
ரோபோடிக்ஸ் பாடப் பிரிவை எடுத்துப் படித்து வருகிறார். ரோபோ படிப்பை
எடுத்துப் படிப்பதற்குச் சிறு வயதிலேயே ரோபோ மீது ஏற்பட்ட ஆர்வம்தான்
காரணம் என்கிறார் இவர்.
"பள்ளியில படிக்கும்போது
பத்திரிகைகளில் வரும் ரோபோ படங்களைப் பார்த்து அட்டைகளில் விளையாட்டா ரோபோ
செய்ய ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ரோபோ மீது ஆசையைத் தூண்டியது. 9ஆம்
வகுப்பு படிச்சபோது மினியேச்சர் புல்டோசர் செய்தேன். அதை மாவட்ட அளவில்
நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தபோது, எனது படைப்பைப்
பாராட்டி இளம் விஞ்ஞானி விருது கொடுத்தாங்க. இது எனக்கு உற்சாகத்தைக்
கொடுத்தது" என்று தன் ரோபோக் காதலுக்கான காரணம் கூறுகிறார் பாலாஜி.
பள்ளிப்
பருவத்திலேயே ஆளில்லா விமானம் உள்பட குட்டி ரோபோக்களைச் செய்து
அசத்தியுள்ளார் பாலாஜி. பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு, தச்சுத் தொழிலாளியான
அவரது தந்தையால் இவரை உடனடியாக மேல்படிப்பு படிக்கு அனுப்ப முடியவில்லை.
ஓராண்டுக்குப் பிறகே மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில்
சேர முடிந்தது. படித்தது இயந்திரவியல் என்றாலும், இந்தக் கால கட்டத்திலும்
உளவு பார்க்கும் ரோபோ, மினியேச்சர் ஜே.சி.பி., வெடிகுண்டு கண்டுபிடிக்கும்
ரோபோ எனப் பலவற்றை செய்து இயக்கியும் காட்டியுள்ளார் பாலாஜி.
கல்லூரிப்
படிப்பை முடித்ததும், நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்
பணி கிடைத்தது. ரோபோ மீது பாலாஜிக்கு இருந்த பேராவலைக் கண்ட அக்கல்லூரி
நிர்வாகம், பாலாஜியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று
எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படிக்க அனுப்பியது.
ரோபோடிக்ஸ்
தொழில்நுட்பங்கள் தெரியாமலேயே அசத்திக்கொண்டிருந்த பாலாஜி, இன்று
ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் அவற்றைக் கச்சிதமாக உருவாக்கும்
முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மிகச் சாதாரண
குடும்பத்தில் பிறந்து தன் சுயமுயற்சியால் ரோபோடிக்ஸில் வெற்றிக் கொடிகட்டி
வரும் பாலாஜிக்கு, வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் சிறந்த
ரோபோடிக்ஸ் விஞ்ஞானியாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.- நன்றி தி இந்து ...தமிழால் இணைவோம்,
உலகின் வேகமாக ஓடும் ரோபோ : வீடியோ
WildCat (காட்டுப்பூனை) என்பது இதுவரை தயாரிக்கப் பட்ட ரோபோட்டுக்களிலேயே தரையில் மிக வேகமாக ஓடும் விதத்தில் உருவாக்கப் பட்ட 4 கால்கள் உடைய ரோபோட் ஆகும். இந்த ரோபோட் பரிசோதிக்கப் பட்ட போது அதிகபட்சமாக 16mph வேகத்தில் ஓடியுள்ளது. கீழே உள்ள வீடியோ WildCat இன் மிகச்சிறந்த தொழிற்பாட்டை வெளிப்படுத்துகிறது.
உலகின் வேகமாக ஓடும் ரோபோ : வீடியோ
WildCat (காட்டுப்பூனை) என்பது இதுவரை தயாரிக்கப் பட்ட ரோபோட்டுக்களிலேயே தரையில் மிக வேகமாக ஓடும் விதத்தில் உருவாக்கப் பட்ட 4 கால்கள் உடைய ரோபோட் ஆகும். இந்த ரோபோட் பரிசோதிக்கப் பட்ட போது அதிகபட்சமாக 16mph வேகத்தில் ஓடியுள்ளது. கீழே உள்ள வீடியோ WildCat இன் மிகச்சிறந்த தொழிற்பாட்டை வெளிப்படுத்துகிறது.